இமயமலையில் 16500 அடி உயரத்தில் புதிய கோயில் சாமியார் பாபாவால் சர்ச்சை!
Oct 3, 2026, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமயமலையில் 16500 அடி உயரத்தில் புதிய கோயில் சாமியார் பாபாவால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Jul 18, 2024, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில், பாகேஷ்வரில் உள்ள சுந்தர்துங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலை பாபா யோகி சைதன்யா ஆகாஷ் என்பவர் அரசு விதிமுறைகளை மீறி கட்டி உள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், சரயு மற்றும் கோமதி நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.

இமயமலை மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாகேஷ்வர் தன் இயற்கை அழகு மிக்கது. பழமையான இந்து மத வரலாற்று சிறப்பு உடைய சிவன் கோயில்களான பாக்நாத் மற்றும் பைஜ்நாத் கோயில்கள் பாகேஷ்வரில் உள்ளன.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பாகேஷ்வரில் பிக்ஹௌடி மேளா வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவில் முக்கிய அம்சம் பாரம்பரிய குமாவோனி நடனம் ஆகும், இது இப்பகுதியின் பிரபலமான நாட்டுப்புற நடனமாகும்.

இமயமலை அடிவாரத்தில் குமாவோன் பகுதியில் அமைந்துள்ள பாகேஷ்வர் நகரம் இயற்கை அழகு. கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் அழகான ஆறுகள் என இயற்கை அழகு நிறைந்தது. பாகேஸ்வரில் உள்ள பிண்டாரி பனிப்பாறை மற்றும் சுந்தர்துங்கா பனிப்பாறை ஆகியவை பிரபலமான மலையேற்ற இடங்களாகும்.

இத்தனை இயற்கை அழகு கொஞ்சும், சுந்தர்துங்கா பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில், விதிமுறைகளை மீறி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. தன்னை தானே கடவுளாக சுய பிரகடனம் செய்து கொண்ட பாபா யோகி சைதன்ய ஆகாஷ் என்பவர் இக்கோயிலைக் கட்டி இருக்கிறார்.

தனது கனவில் பகவதியம்மன் தோன்றி, சுந்தர்துங்கா பனிப்பாறையில் உள்ள தேவி குண்டம் என்னும் இடத்தில் கோயிலைக் கட்டும்படி கட்டளையிட்டதாகக் கூறி, கோயில் கட்டும் திட்டத்துக்கு உள்ளூர் கிராம மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.

இந்த தேவி குண்டம், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்துக்கள் மிக புனிதமான வணங்கும் இடமாகும். புனிதமான தேவி குண்டம், இப்போது பாபாவின் நீச்சல் குளமாகி இருக்கிறது. தேவி குண்டத்தில் பாபா குளிப்பது, பகவதி அம்மனை மட்டுமில்லை இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.

மேலும், பல நூற்றாண்டுகளாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நந்தராஜ் யாத்திரையின் போது தங்கள் தெய்வங்கள் தேவி குண்டத்துக்கு வருகிறார்கள் என்றும், ​​இந்த பாபா கிராம மக்களைத் தவறாக வழிநடத்தி, தங்கள் பாரம்பரியத்துக்கு எதிராக இந்த கோவிலைக் கட்டியுள்ளார் என்று உள்ளூர் மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்பால், உரிய அரசு அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இந்த கோயில் குறித்து அரசு தன் விசாரணையை தொடங்கியுள்ளது.

வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் அலுவலகத்தின் குழு விரைவில் தேவி குண்டத்துக்குச் சென்று ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என்று கூறிய சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அனுராக் ஆர்யா, விரைவில் பாபா யோகி சைதன்யா ஆகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

இந்திய பாரம்பரியம் மிக்க இடங்களில் இது போன்ற தனிநபர்கள், உரிய அனுமதி பெறாமல் தங்கள் இஷ்டத்துக்குக் கோயில் என்ற பெயரில் கனிம வளம் மிக்க நிலங்களை ஆக்கிரமிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Tags: New temple at 16500 feet in the Himalayas by preacher Baba Controversy!
Share
Tweet
SendShare
Previous Post

சாலையின் நடுவே கொலை செய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகி!

Next Post

முதியவரை காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுகள்!

Related News

ஆசிய மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கப்பதக்கம்; இந்தியா சாதனை

மது இல்லா தமிழகம்; புதிய இயக்கத்தை தொடங்கினார் செளமியா அன்புமணி

நீதியை நிலைநாட்டும் மோடி; ராமராஜ்ஜியத்துடன் ஒப்பிட்டு அமைச்சர் எல்.முருகன் பேச்சு

‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் சிறப்பம்சங்கள்; விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்; முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ

Load More

அண்மைச் செய்திகள்

தீவிர மத பற்றாளர், பெண்களுடன் கைகுலுக்க மறுப்பவர் : இந்திய விமானியை குத்திய ஒமானிய துணை விமானி பற்றி பகீர் தகவல்கள் – சிறப்பு தொகுப்பு!

உலகத்திற்கு அமைதி பாதையை பாரதம் காட்டியுள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்

பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திணறும் மீனாட்சியம்மன் கோவில்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies