நெல்லை அருகே வாகன ஓட்டியிடம் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியான நிலையில், தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலக்கருங்குளம் சோதனைச்சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதி என்பவரிடம் மேலப்பாளையம் தலைமை காவலர் சொர்ணராஜ் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோவை ஆதி, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ வைரலான நிலையில், தலைமை காவலர் சொர்ணராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
















