‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்துள்ள மகளிா் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமன்றி, Express, LSS, Deluxe, புறநகர் Ordinary மற்றும் மலைப்பகுதி Ordinary பேருந்துகள், தாழ்தள பேருந்துகளிலும், இனி மகளிா் இலவசமாக பயணிக்கலாம்.
கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக, புறநகா் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிா் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநா்களும் இலவசமாக பயணிக்கலாம்.
7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 12,695 பேருந்துகள் வெற்றி பயணத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12,695 பேருந்துகள் மூலம் நாள்தோறும் 1,68,500 நடைகள் (Singles) இயக்கப்படும்.
இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் மகளிர் எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.
செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறையை கருத்தில் கொண்டு இவ்விரண்டு மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது.
இத்திட்டத்தின் கீழ், மாநகர குளிர்சாதன பேருந்துகளில் பயணிக்க முடியாது.
















