ராம ராஜ்ஜியம் என்பது நீதி, நேர்மை, மனிதநேயம் ஆகியவைகளை நிலைநாட்டுவது என்றும், அதனை பிரதமர் மோடி நிறைவற்றி வருவதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவராக இருந்த அசோக் சிங்களின் நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு உரையாற்றினார். ராம ராஜ்ஜியத்தை, ராம ஜென்ம பூமியை, இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை அசோக் சிங்களை சேரும் என்று அவர் தெரிவித்தார். நீதி, தர்மம், நல்லாட்சி, மனிதநேயத்தின் அடையாளமாக திகழ்வதுதான் ராம ராஜ்ஜியம் என்று கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ராம ராஜ்ஜிய கனவை பிரதமர் மோடி நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
















