மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை மற்றும் பஜனைப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
















