ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்தியாவும் சீனாவும் எதிர்கொண்டன. போட்டியின் முதல் பாதியிலேயே இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி ஒரு கோல் அடித்தார். இதனால், இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து ஃபெனால்டி வாய்ப்புகள் சீனாவுக்கு கிடைத்த போதும், ஒரு கோல்கூட எடுக்க விடாமல் இந்திய கோல்கீப்பர் சவீதா தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் ஆட்ட நேர முடிவில், 4 முறை சாம்பியன் பட்டமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. இதன் மூலம், 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிரணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. மேலும், 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கும், இந்திய ஹாக்கி மகளிரணி தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இந்திய மகளிரணியின் வெற்றியை, வீராங்கனைகளின் குடும்பத்தினர் நேரலையில் பார்த்து தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சரவெடி வானவேடிக்கைகளை வெடிக்க வைத்து, உற்சாகமடைந்தனர்
















