ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தடகள வீராங்கனை அபிநயாவுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லுத்து கிராமத்தைச் சேர்ந்த அபிநயா, 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் குடும்பத்தினர், விமான நிலைய அதிகாரிகள், கிராம மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிநயா, பல தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி மகிழ்ச்சியளிப்பதாகவும், அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே என்றும் தெரிவித்தார். பெண் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















