இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பை போரிவலியில் நடைபெற்ற அனைத்து இந்திய விஹார் சேவா குழு மாநாட்டில் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், உலகில் அதிகரித்து வரும் மோதல்கள், சித்தாந்தப் பிரிவினைகள் மற்றும் சவால்களுக்கு இந்தியாவின் பண்டைய அறிவு மரபுகள் தீர்வை வழங்கும் என்று தெரிவித்தார். படையெடுப்பு அல்லது கட்டாய மதமாற்றம் இன்றி இந்தியா தனது அறிவை வரலாற்று ரீதியாக உலகிற்குப் பகிர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, சமண ஆகமங்கள், திரிபிடகம், குரு கிரந்த சாகிப் போன்ற நூல்கள் மனித நலனுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் வழிகாட்டுகின்றன என்று மோகன் பகவத் கூறினார்.
















