தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பலசரக்கு கடை முன்பு கிடந்த தங்க நகையை போலீசாரிடம் ஒப்படைத்த சகோதரர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கோவில்பட்டி பல்லாக்கு சாலையில் பேப்பரால் சுற்றப்பட்ட பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை காமராஜ் மற்றும் அவரது சகோதரர் கோபிநாத் பிரித்து பார்த்துள்ளனர்.
அதில் தங்க நகை இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த நகையை இருவரும் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்,