சென்னை ஆவடி அருகே சொகுசு கார் மோதிய விபத்தில் தூக்கிவீசப்பட்ட பெண் காவலர் காயமடைந்தார்.
போரூர் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பவித்ரா பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில் பவித்ரா பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.