இந்தியன் 2 திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இ-சேவை மைய ஊழியர்கள் பணம் கொடுத்தால் தான் ஆதார் சேவைகள் செய்ய முடியும் என்று தெரிவிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.