சர்தார் -2 படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் தயாரகி வரும் சர்தார் பாகம் 2-ன் படப்பிடிப்பு சாலிகிராமத்தில் உள்ள தலத்தில் நடைபெற்று வந்தது. அதில் ஏழுமலை என்ற சண்டை பயிற்சியாளர் 20 அடி உயரத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார். இதனிடையே ஏழுமலையின் உடலுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.