தமிழகத்தில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியது.
தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த 2 மாதமாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கவில்லை என மக்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
மேலும் அதிக விலை கொடுத்து அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் வெளியே வாங்கும் நிலையும் உருவானது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது.