திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நெல்லை மக்களவை தொகுதியில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞரான ராபர்ட் புரூஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், 1.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.