சமூக வலைத்தளங்களில் திருப்பதி லட்டு குறித்து தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அன்மையில் திருப்பதி லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம் தாமஸ் என்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள தேவஸ்தானம், ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் மிகச்சிறந்த தரத்துடன் தயாராகி வருவதாகவும், பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களே லட்டுகளை தயாரிக்கவும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.