70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, மேற்கு பாகிஸ்தான் அகதிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சங்க தலைவர் லாபா ராம் காந்தி, டெல்லியில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த குடியுரிமையை வழங்கியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சார்பில் இதயப்பூர்வ நன்றியை தெரிவித்தார்.
தாங்கள் இடம் பெயர்ந்து வந்து துயரமான காலகட்டத்தில் உறுதியான ஆதரவையும், உதவிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தங்கள் மீது காட்டிய இரக்கம் மற்றும் இந்திய சமூகத்தில் இணைத்து தங்களது நலனை உறுதிசெய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.