பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சுட்டில் இருந்து கடவுளே தம்மை காப்பாற்றியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, குடியரசு கட்சியின் தேசிய மாநாடு, மில்வாக்கி நகரில் கடந்த 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் கடைசி நாளான இன்று, ட்ரம்ப் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், பென்சில்வேனியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருந்து கடவுளே தம்மை காப்பாற்றியதாகவும், அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைப் பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ட்ரம்ப் முதன்முறையாக பொதுவெளியில் உரையாற்றியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததன் காரணமாக, ட்ரம்ப் காதில் பேண்டேஜ் அணிந்திருந்த நிலையில், மாநாட்டிற்கு வந்திருந்த அவரது ஆதரவாளர்களும் தங்களது காதில் பேண்டேஜ் அணிந்து ஆதரவு தெரிவித்தனர்.