முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக மத்திய நீர்வள துணைக் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின் போது ஏற்படும் மாற்றங்களை பராமரிப்பதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள், நீா்வள ஆணைய செயற்பொறியாளா் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இந்த மத்திய நீர்வள தலைமைக் குழுவிடம், தமிழக கேரள அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். அதன் படி அணைப் பகுதிக்கு வந்த சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் உள்ளிட்ட அதிகாரிகள் அணையின் நீர்மட்டம் , நிலை குறித்து ஆராய்ந்தனர். இதையடுத்து பேபி அணை, மதகுபகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.