முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆழ் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதியப்பட்ட வழக்கில் கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில் வாங்கல் காவல் நிலைய வழக்கில் கரூர் விரைவு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மகேஷ் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.