குஜராத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் படைப்பாற்றலை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.
ஓய்வு பெற்ற பொறியாளரான சுதிர் பாவே, வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட மிதிவண்டிகளை வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா, சுதிர் பாவே-யின் படைப்பாற்றலுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளார். மேலும், சுதிர் பாவே விரும்பினால் தங்களது வதோதரா தொழிற்சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.