ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்க மும்பையில் இருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது.
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு ஏர் இந்தியா விமானம் 225 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரஷ்யாவில் உள்ள கிராஸ்நோயார்ஸ்க் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இந்நிலையில், சிக்கித் தவிக்கும் பயணிகளை சான் பிரான்சிஸ்கோவிற்கு அழைத்துசெல்ல ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மும்பையில் இருந்து ரஷ்யாவிற்கு புறப்பட்டது.