ஆடி வெள்ளியை ஒட்டி திருச்சி உறையூரில் உள்ள வெட்காளியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து மூலவர் அம்பாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்துள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புகழ்பெற்ற இக்கோயிலில் அமைந்துள்ள துர்கை அம்மனுக்கு ஆடி வெள்ளிக் கிழமையை ஒட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.