கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஸ்கேட்டிங் செய்து 2 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஓசூரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் என்ற 9-ம் வகுப்பு மாணவரும் அதே பள்ளியில் எல்கேஜி படிக்கும் நந்தபாலன் என்ற மாணவனும் தத்துவா ஸ்கேட்டிங் கிளப் என்ற தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.
இந்நிலையில் சாதனை முயற்சியாக மாணவன் கிறிஸ்டோபர் சார்லஸ் 18 கிலோமீட்டர் தூரத்தை 53 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். இவரைப்போலவே சிறுவன் நந்த கோபாலனும் 33 நிமிடத்தில் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு ஸ்கேட்டிங் செய்து சாதனை புரிந்தார்.