Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் Crowdstrike நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர்
இதன் காரணமாக விமான சேவை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இது சைபர் தாக்குதலோ, பாதுகாப்பு குளறுபடியோ அல்ல. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளது. சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Mac மற்றும் Linux பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்படவில்லை. Crowdstrike இணையதளத்தில் தொடர்ச்சியாக அப்டேட்டுகள் வழங்கப்படும்.Crowdstrike வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.