மைக்ரோ சாஃப்ட் சேவை முடங்கியதால், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், முறையான நேரத்தில் இயக்க வேண்டிய இண்டிகோ மற்றும் பைஸ் ஜெட் உள்ளிட்ட பல்வேறு விமான சேவைகளில் பெரும் தடை ஏற்பட்டது. இதனால், விமானத்தில் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவின் கேப்பிடல் நகரம் என அழைப்படும் மும்பையிலும், விமான சேவை முற்றிலும் தடைபட்டது. இதனால், வியாபாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை திடீரென முடங்கியது. இதனால் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், போர்டிங் பாஸ்களை அதிகாரிகள் கைகளால் எழுதிக் கொடுத்தனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு அதிகாரிகள் போர்டிங் கார்டு கைகளால் எழுதி கொடுத்தனர். வெளிநாடுகளுக்கு புறப்படும் விமானங்கள் குறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படாததால், பயணிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். மேலும், திருச்சி டூ பெங்களூர், பெங்களுரூ டூ திருச்சி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்தது.