பொதுமக்களுக்கு கல்வி, மருத்துவத்தை கொடுக்க வேண்டிய அரசு, கிராமங்கள் வரை டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தமிழகத்தை திமுக சீரழித்து வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், கோவை மாட்டம் அன்னூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு மதுவை ஒழிப்போம் என கூறியவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் புதிய புதிய பெயரில் மதுக்கடைகளை அதிகப்படுத்தி வருவதாக எல்.முருகன் குற்றம்சாட்டினார்.