ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
என்ஜிஓ காலனியை சேர்ந்த சுப்பிரமணியம் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் அவரது வீட்டில் இருந்த 235 சவரன் தங்க நகை மற்றும் 40 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்டதாக மேலும் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 42 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.