ஆடி வெள்ளியை முன்னிட்டு நாகை மாவட்டம் திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடை பெற்றது.
ஆடி வெள்ளியை ஒட்டியும் மற்றும் உலகநன்மை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் வேத மந்திரங்கள் முழங்க 208 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கினை அம்பாளாக பாவித்து பட்டு வஸ்திரங்கள் மற்றும் மலர் கொண்டு அலங்கரித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.