சென்னையில் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் தாக்கிக்கொண்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 1-ம் தேதி திருப்பதி நோக்கி சென்ற ரயிலில் மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.
இதுதொடர்பாக அச்சமடைந்த நிலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையர்களை போலீசார் தேடி வந்த நிலையில் ஐயப்பன், ஜெகன், சரத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.