மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய ரயில் தினம்தோறும் இயங்கும் சேவையாக தொடங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை செல்லக்கூடிய இந்த ரயில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாகம், வாரத்தின் அனைத்து நாட்களும் ரயிலை இயக்குவதாக அறிவித்தது. இதற்கென புதிய ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ரயில்பயணிகள் சங்கத்தினர் பிரத்யேக ரயிலை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.