கரும்பு ஜுஸ் கடையில் வேலை செய்ய பிஇ, பிஏ, பி.எஸ்சி, பட்டதாரிகள் தேவை என வைத்துள்ள பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் புதிதாக தொடங்க உள்ள கரும்பு கடையில் பட்டதாரிகள் வேலைக்கு தேவை எனவும் சம்பளம் 18 ஆயிரம், வேலை நேரம் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை எனவும் எழுதப்பட்டுள்ளது.
மேலும் கரும்புசாறு பிழிவற்கான கல்வி தகுதி பிஇ, பிஏ, பி.எஸ்சி என்றும், வயது வரம்பு 25 முதல் 40 வரை இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி எண்ணை அறிவித்து கடை உரிமையாளர் வைத்துள்ள பேனர் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.