ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி சுற்றில் ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடால் அர்ஜெண்டினா வீரர் மரியனோ நவோன் உடன் மோதினார்.
முதல் செட்டை இழந்த ரபேல் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றினார். அதன்படி ரபேல் 6-7, 7-5, 7-5 என்ற கணக்கில் அர்ஜென்டின வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.