இணையத்தில் வைரலாகி வரும் யானையின் பிறந்தநாள் வீடியோ 35 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோவில் ஒரு யானை அலங்காரத்துடன் அழகாக காட்சியளிக்கிறது.
யானைக்கு சுற்றி இருக்கும் மக்கள் பிறந்தநாள் வாழ்த்து கூற, யானையோ அதற்கு பதிலளிப்பதுபோல தலையை ஆட்டுவது காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
மேலும், தட்டில் வைக்கப்பட்டிருக்கும் பழங்களை யானை மகிழ்ச்சியுடன் உண்ணும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.