நடுக்கடலில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் கடற்படை வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கர்வார் துறைமுகத்திலிருந்து 17 கடல்மைல் தொலைவில் நின்ற மார்ஸ்க் பிராங்பேர்ட் என்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது.
கன்டெய்னர்களில் இருந்து கரும்புகை வெளியேறியதால், தகவலறிந்து சென்ற கடற்படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அந்த வகையில், கடற்படைக்குச் சொந்தமான சாச்செட், சுஜீத், சாம்ராட் ஆகிய மூன்று கப்பல்களும் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், கரும்புகை தொடர்ந்து வெளியேறியதாக கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.