நிறுத்தி வைக்கப்பட்ட பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு நிதி உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் சங்கம் சார்பில் மதுரை பெத்தானியாபுரம் மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.