கேரளாவுக்கு என பிரத்யேக வெளியுறவுத் துறை செயலரை அம்மாநில அரசு நியமித்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் வாசுகி, கூடுதல் பொறுப்பாக வெளியுறவுத் துறை சார்ந்த விவகாரங்களுக்கான செயலராக நியமிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அரசியலமைப்புச் சட்டப்படி, வெளியுறவுத் துறை மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால், கேரள அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் கே. சுரேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளபக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெளியுறவு விவகாரங்களில் தலையிட இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற போதிலும், கேரளத்தை தனிநாடாக மாற்ற ஆளும் கட்சி முயற்சிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.