மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் 22 ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள்ளார்.