வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்காக தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை அரசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இட ஒதுக்கீட்டிற்காக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினால் தான் அரசு பணியும் என்றால் அதையும் செய்வோம் என்றும் தெரிவித்தார்.