மின்வாரிய கடனுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் தமாகா சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை என்று குற்றம் சாட்டினார். தமிழக அரசு ஏற்றிய மின்கட்டணத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.