குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாளை முதல் ஜூலை 23-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் பகுதிகளுக்கு இடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து வரும் 23 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.