கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.