சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கிய இணையதள பக்கத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தொடங்கிவைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதை பிரதமர் மோடி இலக்காகக் கொண்டு இருப்பதாகவும், ஒருவர் செய்யும் பணியை நல்ல முறையில், பயிற்சி பெற்று மேற்கொள்வதே அதிகாரம் பெறுவதின் அர்த்தம் என்றும் ஜெ.பி.நட்டா விளக்கமளித்தார்.
பயிற்சி பெற்று ஒரு செயலை செய்வதற்கும், பயிற்சி பெறாமல் செய்வதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக கூறிய அவர், இதேபோல திறமையானவர்களுக்கும், திறனற்றவர்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சாலையோர வியாபாரிகளுக்கான பயிற்சி திட்டத்தின்கீழ், பயிற்சி பெறுபவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.