பீகார் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராக ராப்ரி தேவியை நியமிக்க மேலவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதல்வரான ராப்ரி தேவி, அக்கட்சியின் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு மேலவைத் தலைவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராப்ரி தேவி உள்ளிட்ட 11 பேர் கடந்த மே மாதம் மேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.