முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் 50 ஆண்டு கால சேவையை அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினா்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான வெங்கையா நாயுடுவின் 75 -ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 50 ஆண்டு காலமாக இந்தியாவிற்கு அவர் ஆற்றிய சேவைகளை கொண்டாடும் விதமாக பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில், வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.