திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆடை கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தேவஸ்தான ஊழியர்கள் சனிக்கிழமைகளில் வெள்ளை வேட்டி மற்றும் வெள்ளை சட்டை அணிந்து பணிக்கு வரவேண்டும் என்றும், அனைத்து ஆண் ஊழியர்களும் தங்கள் நெற்றியில் திலகம், குங்குமம், விபூதி வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெண் ஊழியர்கள் புடவை அணிந்து, நெற்றியில் திலகம், குங்குமம், வைத்து வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் ஒருவரையொருவர் சந்திக்கும்போதோ அல்லது பிறரை சந்திக்கும் போதெல்லாம் கோவிந்தா அல்லது ஓம் நமோ வெங்கடேசாயா என்று கூறி பேச தொடங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.