டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
225 பயணிகள் மற்றும் 19 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மாற்று விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.