கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா அருகே ஷிரூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிலர் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு, இதுவரை 7 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இன்னும் 3 பேர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, மீட்பு பணியை மத்திய அமைச்சர் குமாரசாமி பார்வையிட்டு, விவரம் கேட்டறிந்தார்.