உலக பாரம்பரிய கமிட்டியின் 21-ஆவது கூட்ட அமர்வை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உரையாற்றுகிறார். யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
முதன்முறையாக உலக பாரம்பரிய கமிட்டியின் கூட்ட அமர்வை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. வரும் 31-ஆம் தேதி வரை பாரத் மண்டபத்தில் விழா கோலாகலமாக நடைபெறும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.