தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்த நிலையிலும் சுற்றுலாப்பயணிகளுக்கான தடை நீட்டிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் கனமுதல் அதிகன மழை பெய்து வரும் நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கருதி ஆற்றில் இறங்கவோ பரிசல் இயக்கவோ தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து 54 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் ஆற்றில் சுற்றுலாப்பயணிகளுக்கான தடை நீட்டிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.