உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹா அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், அம்ரோஹா அருகே நேற்று தடம் புரண்டது. இந்த விபத்தில், ரயிலின் 7 பெட்டிகள் கவிழ்ந்தன.
இருப்பினும், இந்த சம்பவத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்டதால் டெல்லி-லக்னோ ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.